தமிழ் தொலைக்காட்சி சானல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றிவர் கன்னிகா. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி தான் இவரின் சொந்த ஊர். பாலசந்தர் இயக்கிய சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். சின்னத்திரையில் நடிக்க வந்தார் சினிமா படங்களிலும் நடித்து வந்தார்.
கொளுத்தி படம் தான் அவர் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம். ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்று போய்விட்டது. அடுத்து ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அதுவும் வெளிவரவில்லை. அண்மையில் வந்த தேவராட்டம் படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார்.
சமுத்திர கனி, சிவக்குமார் ஆகியோரின் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஹீரோயினாக நடிக்க ஆசை தான். தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு எளிதாக கிடைப்பதில்லை. நானும் போராடி வருகிறேன்.
நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்பேன் என கூறியுள்ளார்.