ரயில்வே இணையத்தளத்திடம் தான் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆபாச விளம்பரங்கள் வருவதாகக் கூறி ஒரு நபர் பல்பு வாங்கியுள்ளார்.
இந்தியாவில் ஆனந்தகுமார் என்ற நபர் ஐ.ஆர்.சி.டி.சி அதிகாரிகளுக்கும், ரயில்வே அமைச்சருக்கும் ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் நான் டிக்கெட் புக்கிங் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் லாக் இன் செய்தபோது ஆபாச விளம்பரங்கள் வருவதாகவும், அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த புகாரில் அவர் பதிவு செய்திருந்தார். அதோடு தனக்க்கு வந்த ஆபாசப் படங்களையும் அனுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ரயில்வே இணையதளம் ’ஐஆர்சிடிசி கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்தி வருவதாகவும், அந்த விளம்பரங்கள் பயனாளிகள் ஏற்கனவே பயனாளிகள் இணையத்தில் பார்த்த விஷயங்களை சார்ந்தே வரும்.
Obscene and vulgar ads are very frequently appearing on the IRCTC ticket booking app. This is very embarrassing and irritating @RailMinIndia @IRCTCofficial @PiyushGoyalOffc kindly look into. pic.twitter.com/nb3BmbztUt
— Anand Kumar (@anandk2012) May 29, 2019
நீங்கள் பார்த்துள்ள விஷயங்களின் தேடு வரலாறைப் பொறுத்தே அந்த விஷயங்கள் காட்டப்படுகின்றன. தயவு செய்து உங்கள் தேடு வரலாறு மற்றும் குக்கிஸ்களை டெலிட் செய்யுங்கள்.’ எனத் தெரிவித்துள்ளது.
இப்படி தானாகப் போய் மாட்டிக்கொண்ட நபரை இணையதளவாசிகள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
Anand Kumar: *complains about vulgar ads on the Indian railways ticket booking app*
Indian Railways: I’m about to end this man’s whole career https://t.co/QH2DO2QuZQ
— ? (@maaaannuuuuu) May 29, 2019