Loading...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்.
கொழும்புத்துறையில் வீடமைப்பு திட்டமொன்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். வடக்கு கிழக்கில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 10,000 வீடுகளில் ஒரு பகுதி வீடுகள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தவர்களிற்கான வீட்டுத் திட்டம் என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.
Loading...
காலை 11.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும்.
முன்னதாக காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழு மீளாய்வுக்கூட்டம் இடம்பெறும்.
Loading...