நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் திகதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்தின் கீழ், துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும்.
'நேசமணி மீண்டும் திரையில் வருவார்' – ரமேஷ் கண்ணா
Publiée par BBC News தமிழ் sur Jeudi 30 mai 2019
ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது அப்படியே வைரலாக உலகம் முழுவதும் தற்போது இந்த பேச்சுதான். இந்த நிலையில் நேசமணி மீண்டும் திரையில் வருவார் என்றும் ப்ரண்ட்ஸ் பார்ட் 2 வெளியாகும் எனவும் ரமேஷ் கண்ணா அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.