அமெரிக்காவில் பிறந்த குழந்தை ஒன்று உயிர்பிழைப்பதே கடினம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது அதன் எடை, வெறும் 245 கிராம் மட்டுமே இருந்தது.
தாயின் வயிற்றில் 23 வாரங்கள், 3 நாள்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறக்கும் போதே, பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் எண்ணியதால், சுமார் ஐந்து மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.
தற்போது அந்தக் குழந்தை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் அளவுக்கு உடல்நலம் தேறி நல்ல நிலையில் இருக்கிறார்.
அதில், குழந்தையின் பெற்றோர்களுக்கு பிரைவஸி பாதிக்கக் கூடாது என்பதால் அதற்கு செய்பி என்று மாற்றுப்பெயரிடப்பட்டுள்ளது.
செய்பி, தாயின் கருவிலிருந்தபோது அவளின் வளர்ச்சிக் குறைபாடுகளால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டதால், முழுவளர்ச்சியடையும் முன்னரே பிரசவம் பார்க்கப்பட்டது.
செய்பி பிறந்தபோது மிகவும் குட்டியாக இருந்தாள். படுக்கையில் படுக்க வைத்திருந்தால் எங்களால் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு குறைவான எடையில் இருந்துள்ளார்.
இது குறித்து குழந்தைக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறுகையில், குழந்தை பிறந்தபோது அது பிழைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை.
அதன் நுரையீரல் வளர்ச்சியடையாத நிலையில் இருந்ததால், குழந்தையின் உடலுக்குள் செயற்கை சுவாசக்குழாய் நுழைக்கப்பட்டது.
தற்போது குழந்தை நல்லபடியாக சுவாசித்தாலும் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பும் தேவைப்படும் என்று கூறியுள்ளார்