யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் 2016 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் பூசை செய்த அர்ச்சகர் ஒரு முஸ்லிம் இனத்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2016 – 2017 காலப்பகுதியில் மருதனார்மடம் இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் பிரதீப சர்மா என்ற பெயரில் பூசை செய்தவர் கெக்கிரா வையை சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் முகமட் ஜெவ்ரி என்றும் இனங்காணப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இணுவில் வடகிழக்கு (ஜே/190) கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த பிரஸ்தாப அர்ச்சகர் தனது குடும்பப் பதிவை நீக்கித் தருமாறும், தாம் தற்போது கெக்கிராவைக்குச் சென்று விட்டதாகவும் குறித்த பகுதி கிராம சேவையாளரிடம் தெரிவித்துள்ளார்.
பதிவை இரத்துச் செய்வதற்கான ஆவணங்கள் பரிசீலித்த போது பிரதீப சர்மாவின் பெயர் முகமட் ஜெவ்ரி என கண்டறிந்த கிராம சேவையாளர் அது தொடர்பில் உடுவில் பிரதேச செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
முஸ்லிம் இனத்தவர் ஒருவர் மருதனார் மடம் இராமநாதேஸ்வரர் ஆலயத்தில் பூசை செய்தார் என்ற தகவலால் அதிர்ந்து போன உடுவில் பிரதேச செயலகம், சம்பந்தப்பட்ட தகவலை பாதுகாப்புத் தரப்பிடம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து புலனாய்வுத்துறை யினர் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரதீப சர்மா முஸ்லிம் பெண்ணொருவரைத் திருமணம் செய்தவர் என்றும் அதற்காக அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறினார் என்றும் இஸ்லாமிய மதத்தி லிருந்து கொண்டே சிவபூசை செய்தார் என் றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.