Loading...
கைத்தொழில் வணிக பிரதியமைச்சர் புத்திக பத்திரண முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள கைத்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல், இன்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
Loading...
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பிரதியமைச்சர் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம், கைத்தொழில் முயற்சி அதிகார சபையின் அதிகாரிகள், மாவட்ட செயலக தொழிற்பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Loading...