நம்முடைய பிறந்த திகதி என்பது மிகவும் முக்கியமானதாகும். நாம் பிறக்கும் திகதி, கிழமை, நேரம், வருடம் என அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தவையாகும்.
பிறந்த திகதி என்பது நாம் பிறந்த நாளின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாகும். நியூமராலஜியில் இது மிகவும் முக்கியமான எண்ணாகும்.
ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கண்டறிய அவர்களின் பிறந்த எண்ணே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி எந்த வயதில் உங்கள் வாழ்க்கை வெற்றியின் பக்கம் திரும்பும் என்பதை கண்டறியலாம்.
பிறந்த எண் 1
பிறந்த எண் 1 ல் இருப்பவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது அவர்களின் 22 வது வயதாகும். இந்த வயதில் அவர்கள் பணம், பொருள் மற்றும் வெற்றியை குவிப்பார்கள். இந்த வயதில் அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உகந்ததாக இருக்கும்.
பிறந்த எண் 2
உங்களின் பிறந்த திகதி 2,11,20 மற்றும் 29 ஆக இருந்தால் உங்களின் பிறந்த எண் 2 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் வயது அவர்களின் 24 வது வயது ஆகும். அவர்களின் உழைப்புக்கெல்லாம் பலனை அவர்கள் இந்த வயதில் அனுபவிப்பார்கள்.
பிறந்த எண் 3
3, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 3 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டமான வயது 32 ஆகும். இந்த வயதில் இருந்து அவர்கள் தொடர்ந்து வெற்றியை குவிப்பார்கள். அதுவரை வேலை பார்த்த இவர்கள் அதற்கு பின் வேலை வாங்குவார்கள்.
பிறந்த எண் 4
4, 22,31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்களுக்கு வெற்றி, பதவி உயர்வு, மரியாதை அனைத்தும் தேடிவரும்.
பிறந்த எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். இவர்களின் அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்களின் வாழ்க்கை மொத்தமாக வேறு விதத்தில் மாற்றமடையும். அனைத்து செல்வங்களும் இவர்களை தேடி வரும்.
பிறந்த எண் 6
6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண்தான் 6 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 25 ஆகும். அவர்களின் இலட்சிய வேலையை அவர்கள் இந்த வயதில் அடைவார்கள். அது அவர்களின் வெற்றிக்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்.
பிறந்த எண் 7
பிறந்த எண் 7 ஆக இருப்பவர்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட வயது 38 மற்றும் 44 ஆகும். இந்த வயதுகளில் இவர்களின் வாழ்க்கை ஒவ்வோர் படியாக முன்னேறிக்கொண்டே செல்லும்.
பிறந்த எண் 8
பிறந்த எண் 8 ஆக இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகும். ஏனெனில் இவர்களின் வாழ்க்கை முட்கள் நிறைந்த ரோஜா படுக்கை போல இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்கள் நினைத்த நிலையையும், செல்வத்தையும் அடைவார்கள்.
பிறந்த எண் 9
9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் வயது 28 ஆகும். இந்த வயதில் அவர்கள் பெரிய புகழையும், அதிக செல்வத்தையும் அடைவார்கள்.