Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலம். ஹிந்தியில் பதிமூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. அதையும் வழக்கம் போல சல்மான் கான் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
மராத்தியில் சென்ற வாரம் பிக்பாஸ் துவங்கிய நிலையில், தமிழில் கமல் தொகுத்து வழங்க, ஜூன் 23ம் தேதி பிக்பாஸ் 3 துவங்குகிறது.
இந்நிலையில் பாலிவுட்டின் சர்ச்சை நடிகை ராக்கி சாவந்த் தான் பிக்பாஸ் 13க்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது காதலர் என கூறப்படும் தீபக் என்பவருடன் தான் அவர் ஜோடியாக வரவுள்ளார்.
இந்த வாய்ப்புக்காக அவர் சல்மான் கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Loading...