ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வு பிரதானி ஆகியோர் அரசியல்வாதிகளினால் ஊடகங்கள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக விசாரணைகள் நடத்தப்படுவதனூடாக தேசிய பாதுகாப்பு தொடர்பான சில இரகசிய தகவல்கள் வெளியாகும் நிலையேற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தரப்பினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ள ஜனாதிபதி பிரதமரிடம் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னர் இது தொடர்பாக தனது கட்சியினருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போது ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பாக முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.