புலனாய்வு பிரிவினரின் தகவல்களை தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக கோருவது இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைய நாட்டின் நிலவரங்கள் தொடர்பாக தாங்கலையில் தொடர்ந்தும் விளக்கமளித்த மஹிந்த ராஜபக்ஷ,
புலனாய்வு கட்டமைப்பு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டார்.
தகவலை வழங்கும் புலனாய்வு முகவர் அமைப்புக்களை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் எனவும், இவற்றினையே அனைத்து நாடுகளும் மேற்கொள்வதாகவும் தற்போதுள்ள அரசாங்கமும் இவ்வற்றினை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பொதுமக்களின் தேசிய பாதுகாப்பைப் பற்றிய முக்கியமான தகவலை வெளிப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற நிலைமைகளினால் ஏமாற்றமடைந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.