வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கான அபராதம் 2500 ரூபா அல்ல 25000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும்.
வர்த்தக மயமாக்கலைப் போன்று வீதி அபிவிருத்தியின் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த வீதிப் போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
வீதியை கடப்பது முதல் வீதி விபத்துக்களை தடுப்பது வரையிலான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் மத்தியிலும் ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் ஒழுக்கமற்ற நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.