கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தாம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போனமை சம்பந்தமாக அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
20 பக்கங்களை கொண்ட அந்த மனுவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பின் கீழ் நாட்டின் புலனாய்வு பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு தரப்பும் இருக்கின்றது. இவற்றுக்கு இடையில் தொடர்பாடல்கள் குறைந்து போனது.
அத்துடன் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக தான் முன்னெடுத்த விசாரணைகளை அரச புலனாய்வு சேவை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
அத்துடன் அரச புலனாய்சு சேவைக்கு கிடைத்திருந்த தகவல்கள் சம்பந்தமாக அரச புலனாய்வு சேவை சரியான கவனத்தை செலுத்தவில்லை என பூஜித் ஜயசுந்தர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.