நாட்டின் எதிர்காலம் கருதி, நாட்டை தேவையற்ற குழப்பத்திற்குள் ஆழ்த்த விரும்பாமல், கட்சி முடிவின்படி அமைச்சர் ரிசாட் பதியுதீன் துறக்கவுள்ளார் என நாளை கட்சி கூட்டத்தில் பதவி விலக இருப்பதாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வருகிறது. இதையடுத்தே நாள், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அவசர கூட்டம் நடக்கிறது.
பெரும்பாலும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் நாளை பதவி விலக வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிசாட் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி அத்துரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டம் நாளை, நான்காவது நாளை எட்டுகிறது.
இந்த விவகாரத்தை இழுத்து செல்வது, வீணாண நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், ரிசாட்டை பதவிவிலகுமாறு ஜனாதிபதி கோரியதாக கூறப்படுகிறது.
இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாமல் இருக்க வேண்டும் என்பதால், கட்சியின் முடிவின்படி பதவி விலகுகிறேன் என ரிசாட் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது