மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலை வெகு எளிமையாக ஒரு கல்யாணம் நடந்தது. ஒரே மகள் புவனா.
சிறப்பாக நடக்க வேண்டிய திருமணத்தை பணம் எடுக்க முடியாத காரணத்தால் ஆங்கங்கே கடன்கள் சொல்லியும், செக் கொடுத்துத் தான் நடத்தினார் அந்த பாசமிகு தகப்பன்.
கல்யாணத்திற்கும் பெரிய கூட்டம் இல்லை. மொய் பணத்தில் சில வரவு செலவுகளை சரி செய்யலாம் என்று நினைத்த போது அதற்கும் சிக்கல் வந்தது.
வந்த உறவினர்கள் அனைவரும் செக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.நிலைகுலைந்து போனது அந்த பெண்ணின் குடும்பம்.
மாப்பிள்ளை வீட்டில் கடுப்பானர்கள். முறையான ஏற்பாடுகள் இல்லாமல் எப்படி கல்யாணம் ஏற்பாடு செய்தீர்கள்..? விளாச ஆரம்பித்தார் மணமகன் அப்பா. சலித்துக் கொண்டார்கள்.அவர்கள் சமூக வழக்கப்படி பெண்ணின் வீட்டில் தான் முதலிரவு நடத்த வேண்டும். அதிலும் நிறைய சம்பிரதாயங்கள். கலங்கி விட்டார் புவனா அப்பா.
புவனாவின் தோழி உமா வேறு வழி இன்றி தனது வங்கி அட்டையை புவனாவிற்கு கொடுத்து விட்டுப் போனாள். முடிவு செய்தாள் புவனா. மதிய உணவு முடிந்ததும் கல்யாணக் கோலத்தில் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
மார்த்தாண்டம் கன்னியாகுமரி சாலையில் ஒரு ஏ.டி.எம். நீண்ட வரிசையில் இருந்தது. போனாள். வண்டியை நிறுத்தினாள். அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
போய் வரிசையில் நின்றாள். அப்போது மக்கள் அதிர்ந்து விட்டார்கள்..! என்ன என்று விசாரித்தால் புவனா எதுவும் பேசாமல் உடைந்து அழத்துவங்கி விட்டாள்..!
மொத்த ஜனமும் பதறிப் போனது. அவரை உட்காரவைத்து தண்ணீர் கொடுத்து ஒரு பெண் ஆறுதலாக விசாரிக்க, முதல் இரவுக்கு கூட பணம் இல்லை. மாப்பிள்ளை அப்பா அசிங்கமாக என் அப்பாவை திட்டி விட்டார் என்று உடைந்து அழ அத்தனை பெரும் கண்கலங்கி விட்டனர்.
உடனே கூட்டம் மொத்தமும் புவனா பணம் எடுக்க வழி விட்டது..! மறுத்தாள் புவனா “நான் வரிசையில் நிற்கிறேன்” என்று கூற பெண்கள் திட்ட ஆரம்பித்தனர் உரிமையோடு..!
இதற்குள் மணமகன் அலறி அடித்துக் கொண்டு பைக்கில் தேடி அலைந்து அங்கு வந்து சேர்ந்தான். மக்கள் அவனைப் பார்த்து முணு முணுத்தனர்.
சிலர் நேரடியாக கடிந்தும் கொள்ள, அவர்களிடம் மன்னிப்பு கேட்டான் மணமகன் சௌந்தர். இரண்டாயிரம் ரூபாய் எடுத்தாள் புவனா.
நான் பார்த்துக் கொள்கிறேன் நீ வா..என்று கூறி அவளிடமும் மன்னிப்பு கேட்டான் கணவன். பின்னர் இருவரும் கிளம்பிப் போனார்கள்..!
பொது மக்கள் நீண்ட நேரம் மனதெல்லாம் வலியுடன் அங்கேயே நின்றார்கள்..! கருத்துச் சொல்லுங்கள்.. நண்பர்களே..! பகிருங்கள்.
அப்படியே புவனாவை கொஞ்சம் வாழ்த்துங்கள்..!