பாபு..மிக நல்ல மனிதன். மனைவி வினிதா மீது உயிரையே வைத்திருந்தான்.வினிதாவும் நல்ல பெண்ணாகத்தான் இருந்தாள்.
கணவன் நடத்திய கடை லாஸ் ஆகும் வரை. திருச்சி பாலக்கரையில் கடையும் கொஞ்ச தூரத்தில் லீஸ் வீடும் எடுத்திருந்தான் பாபு.
காலை கடைக்கு போனால் இரவு பதினோரு மணிக்கு வீடு திரும்புவான். அடித்துப் போட்ட மாதிரி தூங்கிப் போவான். தினமும் கிடைக்கும் ஆயிரங்களை அப்படியே மனைவியிடம் கொடுக்க அவள் வங்கியில் போட்டுவிடுவாள்.
வினிதவிற்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். விதவிதமான புடவைகள், நகைகள் வாங்கிக் கொள்வாள். வாரம் ஒருமுறை அழகுநிலையம் சென்று விடுவாள். பழங்கள் நிறைய சாப்பிடுவாள்.
அதனால் உடம்பில் ஒரு மினுமினுப்பு இருந்தது. நல்ல கலர்வேறு..! ரோட்டில் நடந்து போகும் ஆண்களும் வினிதாவைப் திரும்பிப்பார்க்காமல் செல்ல முடியாது.
அதில் வினிதாவிற்கு நிறைய சந்தோசம்.
இவளை ஒரு முறை பார்த்து விட்டார் அந்த அரசியல் பெரும்புள்ளியின் தம்பி..! சொக்கிப் போனார்…!
இப்படி ஒரு அழகியா..யாருடா இது..! அல்ல கைகள் மொத்த ஜாதகத்தையும் இரண்டே நாளில் கொடுத்துவிட்டனர். அழகுநிலையப் பெண் பொறுப்பு எடுத்துக் கொண்டார்.
ஒரே வாரத்தில் வினிதாவை மடக்கி அரசியல் தம்பியின் பண்ணை வீட்டிற்கு கொண்டு போய்விட்டானர்.
எடுத்த எடுப்பில் வைர நெக்லஸ் எடுத்து கழுத்தில் மாட்ட ஆடிப்போனாள் வினிதா. காதல் வசனங்கள் பேசி வீழ்த்தி வீட்டார். சொக்கிபோனார் அரசியல் தம்பி.
இவளை நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடிவு செய்தார். விலை உயர்ந்த செல்போன், நகைகள் பட்டுப் புடவைகள் என்று அசத்தினார்.
இது எதுவும் அந்த அப்பாவி கணவனுக்கு தெரியாது. ஊட்டிக்கு அழைத்தார் அரசியல் வாரிசு. பொய் சொல்லிவிட்டு கூடவே போனாள் வினிதா.
ஒருவாரம் ஆசை உல்லாசத்தில் திகைத்தார்கள். அங்கு தான் கணவனை முடித்துவிட நூல் விட்டார் அரசியல் தம்பி. ஒரு கொசுவர்த்தி சுருள் சில திட்டங்கள்.
பாபு தூங்கும் போது அப்படியே செய்தாள். இரவு படுக்கையில் கருகிப் போனான் அந்த அப்பாவி கணவன் பாபு..!
வினிதா மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் அரசியல் செல்வாக்கில் ஒன்றும் செய முடிய வில்லை. ஆட்சி மாறியது.
யாரும் எதிர் பாராத வகையில் அந்த அரசியல் வாரிசு இறந்து போக, போலீஸ் மீண்டும் பாபு மரணத்தை தூசி தட்ட வகையாக மாட்டினாள் வினிதா.
ஆனாலும் ஏனோ தெரியவில்லை..! வெளி வந்து விட்டாள் வினிதா. இப்போது கேரளாவில் போய் முடங்கிக் கொண்டாள் வினிதா. பத்திரிக்கைகள் எழுதின..மறந்தும் போயின..!