தமிழீழ விடுதலைப் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் தமக்குத் தெரியாது என கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தெரிவித்துள்ளார். நளினி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நளினி முருகன் எழுதிய சுயசரிதையொன்று எதிர்வரும் 24ம் திகதி வெளியிடப்பட உள்ளது. 500 பக்கங்களைக் கொண்ட இந்த சுயசரிதையில் பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியின் புதல்வி பிரியன்கா காந்தி எதற்காக தம்மை சந்தித்தார் என்பது தமக்கு புரியாத புதிராகவே தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் சிறையில் இருந்த போது கருவுற்றிருந்ததாகவும் கருவை கலைப்பதற்கு இந்திய காவல்துறையினர் மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், இந்த மருத்துவர் தெய்வத்தைப் போன்று கருவை கலைக்க அனுமதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.