Loading...
கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இணைந்து 2019 மஹருப் நகர் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் சர்தாபுர, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே விற்பனைக்கு தயாரிக்கப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Loading...
அவரிடமிருந்து 50 மீட்டர் நீளமான 114 வலைகள் மற்றும் 100 மீட்டர் நீளமான 125 வலைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Loading...