அவுஸ்திரேலியாவில் மெமேனா ஷோமா என்ற 24 வயது யுவதியே சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்த அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதையடுத்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பங்களாதேஷ் யுவதிக்கு அவுஸ்திரேலிய நீதி மன்றம் 42 வருடங்கள் சிறைத்தண்னை விதிக்கப்பட்டுள்ளது.
ரோஜர் சிங்காரவேலு என்ற ஈழத்தமிழரை கத்தியால் குத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
அல்லாஹூ அக்பர் என கத்தியபடி சமையலறை கத்தியால் குத்தியுள்ளார். கழுத்தில் காயமடைந்த சிங்காரவேலு பின்னர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருந்தார்.
வெறுக்கத்தக்க, கோழைத்தனமான தாக்குதல் என குறிப்பிட்ட நீதிபதி, 42 வருட சிறைத்தண்டனையை, பிணை இல்லாமல் 31 வருடம் 6 மாதங்கள் அனுபவிக்க உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் புர்ஹா அணிய ஆரம்பித்த ஷோமா, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றும் கறுப்பு நிற புர்ஹாவுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
கண்கள் மட்டுமே வெளித் தெரிந்தன. நீதிபதியின் முன்பாக எழுந்து நிற்கவும் மறுத்து விட்டார்.
மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு வாரத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஜிஹாத்தின் பெயரால் அந்த தாக்குதலை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
01. அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது ஷோமா
02. ரோஜர் சிங்காரவேலு குடும்பம