பெரும்பாலான குடும்பங்கள் தற்போது வீடுகளில் சமைத்து உண்பதை விட உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவதையே விரும்புகின்றனர்.
அந்த அளவிற்கு ஹொட்டல் உணவுகள் மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன. ஹொட்டல் உணவுகளின் சுவைக்கு பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் அடிமையாகியே வருகின்றனர்.
தற்போது சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் நபர் ஒருவர் வாங்கி சென்ற கோழிக்கறி பொரியலில் புழுக்கள் இருந்துள்ளது. இதனை அவர் காணொளியாகவும் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சியானது இலங்கையில் கல்முனை என்ற பகுதியில் அல்தாப் என்ற உணவகத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காட்சியினை அவதானித்த சிலர் பழுதடைந்த உணவை எடுத்து வைத்துக்கொண்டு நபர் நாடகமாடுகின்றார் என்றும் அவருக்கு எதிராகவும், சிலர் குறித்த நபருக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
கல்முனை அல்தாப் உணவகத்தில் இருந்து உண்பதற்காக வாங்கிச் சென்ற கோழிப்பொரியலில் புழுக்கள்…உரிமையாளர் கேட்கிறார் இதை சாப்பிட்டு சாகப்போறிங்களா என்று….
Publiée par வணக்கம் Kalmunai sur Mardi 4 juin 2019