நோய்கள் வருவதற்கு முன்னரே நம் உடம்பில் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும், அதை வைத்து என்ன நோய் என்பதை நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
நோய் வரும் முன் தோன்றும் அறிகுறிகள்?
கண்கள் அல்லது மூக்கில் தொடர்ந்து அரித்துக் கொண்டிருந்தால், ஜலதோஷம் பிடிக்கப்போகிறது என்று அர்த்தம்.
கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், நம் உடலில் அதிக அழுத்தமும், அதிக சூடும் இருக்கிறது என்று அர்த்தம்.
முழங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு ஆகியவற்றில் வலி ஏற்பட்டால், உங்கள் உடல் எடை அதிகமாக கூடுகிறது என்று அர்த்தம்.
தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்பு பகுதியில் வலி வந்தால், இடுப்பில் உள்ள இரு எலும்புகளும் தேய்மானம் அடையப் போகிறது என்று அர்த்தம்.
உதட்டில் அல்லது மேல் தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், உடலில் நீர்ச்சத்து மற்றும் எண்ணெய் பசை குறைந்து விட்டது என்று அர்த்தம்.
முகத்தில் அரிப்பு அல்லது நமைச்சல் எடுத்தால், கூந்தல் சுத்தமில்லை என்று அர்த்தம்.
வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால், கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என்று அர்த்தம்.
காதில் அதிக குடைச்சல் அல்லது வலி வந்தால், காய்ச்சல் வரப்போகிறது என்று அர்த்தம்.
கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கு ஆகிய இடங்களில் கருப்பான பட்டை விழுந்தால், கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என்று அர்த்தம்.