பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க இந்த மாதம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை வேதனம் 700 ரூபாவாக கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அதிரிக்கப்பட்டது.
நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் உறுதியளித்த நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் 700 ரூபாவாக வேதனம் அதிகக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியில் அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த 50 ரூபா மேலதிக கொடுப்பனவு மே மாதம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், அது வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், இந்த மாதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுமா? என்பது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் எமது செய்திச் சேவை வினவியது.
இதன்போது பதிலளித்த அவர், கடந்த மாத கொடுப்பனவுடன் சேர்ந்து இந்த மாதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.