உலகளாவிய ரீதியில் நாட்டுத் தலைவர்களில் முன்மாதிரியானவர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராவார்.
இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் மிகவும் சாதாரணமான ஒருவராக நடந்து கொள்ளும் பண்புள்ளவராக சமகால ஜனாதிபதி காணப்படுகிறார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு ஒன்று பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. அவர் இலங்கை நாடாளுமன்று வரலாற்றிலும் ஜனாதிபதி வரலாற்றிலும் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கான செலவீனம் மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்றது.
காலை 10.30க்கு விவாதம் ஆரம்பமானது. ஜனாதிபதி 10.40க்கு நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தார். எனினும் விவாதம் மாலை 5.20க்கு முடிவடைந்தது. அதுவரை ஜனாதிபதி நாடாளுமன்றில் இருந்த விவாதங்களை கவனித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடு இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். இதன்மூலம் முன்மாதிரியான ஜனாதிபதி என தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதங்களில் போது அமைச்சர்களே நாடாளுமன்றில் முழுமையாக அமர்ந்திருப்பதில்லை. அவ்வாறான நிலையில் ஜனாதிபதி சுமார் ஏழு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்றில் இருந்துள்ளார்.
ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றில் அமர்ந்திருந்த போதும், பெரும்பாலான ஆசனங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதாக தெரிய வருகிறது.
பல்வேறு விடயங்களில் ஜனாதிபதியின் தனித்துவமான செயற்பாடுகள், 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போதும் அவர் போட்டியிட வேண்டும் என மக்களை எண்ண வைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.