Loading...
அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு அமைச்சர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக பதவி விலகியமைக்கு ஏனையவர்களும் பதவிய விலகியது தவறு என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் பதவி விலகியமையானது தகுதியற்ற செயற்பாடு என மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
பதவி விலகி அமைச்சர்கள் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆதரவாக, அரசாங்கத்திலிருந்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...