Loading...
முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது, நாட்டை நேசிக்கும் புதியத் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் வலியுறுத்தினார்.
கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
Loading...
“நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரரேரணைகள் வெற்றிபெறுமா என்பதை விட, மக்களின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்பதில்தான், தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில், அரசியல் கொள்கையொன்று இல்லாதது, ஒரு பாரிய குறையாகவுள்ளது என்றும் அரசியல்வாதிகளுக்கென்று கொள்கைகளை வகுக்க, மதத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
Loading...