Loading...
ராஜஸ்தானில் சிகிச்சை பெற வந்த நோயாளியை மருத்துவர் ஒருவர் சரமாரியாக அடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நோயாளிகளை கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை பார்ப்பவர்கள், ஒரு உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கடவுளுக்கு அடுத்தப்படியாக மருத்துவர்களுக்கே கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம். பிறப்பு, இறப்பு இரண்டையும் பார்க்கும் மருத்துவ சேவை எப்போதுமே போற்றுதலுக்கு உரியது தான்.
ஆனால் சில மருத்துவர்கள் அந்த கடமையை உணர்ந்து சரியாக செயல்படுகிறார்களா? என்றால் அது கேள்விக்குறி தான். ஒட்டு மொத்த எல்லா மருத்துவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட முடியாது. ஆனால் இதுப்போன்ற சில மருத்துவர்களால் மருத்துவ துறைக்கே அவப்பெயர் வந்து விடுகிறது.
Loading...