பலர் தொப்பையால் பெரிதும் அவஸ்தைப்படுவதோடு, தங்களுக்கு பிடித்த உடையை அணிய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
மேலும் இந்த தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் இணையதளத்தில் உலா வருகின்றன. இருப்பினும் பலருக்கு அந்த வழிகள் சரியாக செயல்படுவதில்லை. ஆனால் அவற்றில் சில நல்ல பலனைத் தருபவை.
இங்கு அப்படி தொப்பை வராமல் தடுத்து, தட்டையான வயிற்றை இரண்டே வாரங்களில் பெற உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம். குறிப்பாக இவைகளை தொப்பை குறையும் வரை மட்டுமின்றி, குறைந்த பின்னரும் பின்பற்ற வேண்டும்.
இப்போது இரண்டே வாரங்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் சில வழிகளைப் பார்ப்போம்.
சர்க்கரையை குறைக்கவும்
தொப்பை குறைந்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் போது, உடலில் தங்கியுள்ள கொழுப்பின் அளவும் குறையும். அதிலும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், நல்ல மாற்றம் தெரியும். குறிப்பாக பேக்கரி உணவுகள், ஜங்க் உணவுகள், ஐஸ் க்ரீம்கள் மற்றும் பால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
காய்கறி மற்றும் பழங்களின் டயட்
விரைவில் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளில் தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும், பழங்களில் ஆப்பிள் மற்றும் அன்னாசியையும் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
உடற்பயிற்சி
எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தினமும் குறைந்தது 3-4 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால், மன அழுத்தம் நீங்குவதுடன், வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரைந்துவிடும். எனவே உங்களுக்குப் பிடித்த, உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை காலையில் செய்து வாருங்கள்.
பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும்
இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.