அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை பிடிக்காதவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறலாம் என அந்நாட்டு நீதிபதி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதை தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நீதிபதியான John Primomo என்பவர் பங்கேற்றுள்ளார்.
அப்போது, ‘நீங்கள் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்தீர்களா? இல்லையா? என்பது இப்போது முக்கியமில்லை. ஆனால், தற்போது அவர் தான் உங்களது ஜனாதிபதி.
நீங்கள் உண்மையான அமெரிக்க குடிமகனாக இருந்தால் இதனை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.
ஒருவேளை, டிரம்பை நீங்கள் வெறுத்தால், அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறலாம். உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்.
அதேசமயம், டிரம்பை எதிர்க்கிறேன் என்ற பெயரில் நமது தேசிய கொடியை எரிப்பது சட்டத்திற்கு எதிரானது ஆகும்’ என நீதிபதி கருத்து கூறியுள்ளார்.
நீதிபதியின் இக்கருத்தால் கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ‘நான் டிரம்பிற்கு ஆதரவாளர் இல்லை. மனித உரிமைகளின் அடிப்படையில் அவ்வாறு கருத்து கூறியதாக’ நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.