உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜெஸ்ஸிகா என்ற நான்கு வயது குழந்தை இறந்து விட்டதாக அவரது தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் Lancashire நகரத்தைச் சேர்ந்தவர் Andy Whelan. இவருக்கு Jessica என்ற நான்கு வயது மகள் உள்ளார்.
இவர் கடந்த இரு வாரத்திற்கு முன்னர் தன்னுடைய மகள் மரணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்று Jessica வின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.
ஜெசிக்காவுக்கு கடந்த யூலை மாதம் 2015 ஆம் ஆண்டு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. இதனால் அவர் குறைந்தது ஒரு வாரத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
புற்றுநோயினால் Jessica படும் வலியும் வேதனையையும் தொடர்பான புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் அனைவரும் மிகுந்த வருத்தம் அடைந்ததுடன் மட்டும் அல்லாமல் தேவை அறிந்து நிதி உதவியும் செய்தனர். இதனால் ஜெசிக்கா உலகம் முழுவதும் பிரபலம் ஆனாள்.
இந்நிலையில் அவரின் தந்தை Andy Whelan இன்று காலை 7 மணிக்கு ஜெசிக்கா தம்மை எல்லாம் விட்டு சென்று விட்டதாக கூறி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் தன் மகளுடன் இருந்த கடைசி இரவின் போது அவள் பேசிய வார்த்தைகள் மற்றும் தன் கையை இறுக்காமாக பிடித்து தூங்கியவள் தான் அதன் பின் அவள் கண் விழிக்கவே இல்லை என்று அவர் எழுதிய உணர்ச்சிகரமான வார்த்தைகள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ஜெசிக்காவின் இறந்த செய்தி தான் பிரித்தானியாவில் உள்ள ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.