கானாவில் ஆயுத முனையில் கடத்திச்செல்லப்பட்ட இரண்டு இளம் கனேடிய பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குமசி(Kumasi) நகரிலுள்ள மதுபான விடுதிக்கு அருகில் கடந்த 4ஆம் திகதி இவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.
பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் கானாவிற்குச் சென்றிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் கடத்தப்பட்ட இருவரும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து கனேடியர்களும், மூன்று நைஜீரியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.