Loading...
பிரபல எழுத்தாளரும், திரைக்கதை வசன கர்த்தாவுமான ஜெயமோகனை தாக்கிய கடையின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் அவர், தனது வீட்டின் அருகில் இருந்த மளிகை கடையின் உரிமையாளர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அந்த கடையின் உரிமையாளர், தன்னை தாக்கியதாக ஜெயமோகன் அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதனையடுத்து பொலிஸார் கடையின் உரிமையாளரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாபநாசம், நான்கடவுள், சர்கார் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் மலையாளப் திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...