Loading...
இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா 1 இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து இது செலுத்தப்படுகிறது.
தரிந்து ஜயரத்ன, துலானி சம்மிக்க விதானகே என்ற இலங்கையின் இரண்டு இளம் பொறியியலாளர்களால் ராவணா செய்மதி உருவாக்கப்பட்டிருந்தது. ஆர்தர் சி.கிளார்க் நிறுவகத்தில் இவர்கள் கல்வி கற்கிறார்கள்.
Loading...
யப்பானின் Kyushu தொழில்நுட்ப நிறுவனத்தில் இது உருவாக்கப்பட்டிருந்தது. 1.1 கிலோகிராம் நிறையுடைய ராவணா செய்மதி, 1000 சென்ரிமீற்றர் சுற்றளவுடையது. ஒன்றரை வருட ஆயுள்காலமுடைய ராவணா செய்மதி, பூமியிலிருந்து 450 கிலோமீற்றர் சுற்றுவட்ட பாதையில் பயணிக்கும்.
இலங்கை வரலாற்றில் முதலாவதாக விண்ணில் செலுத்தப்படும் செய்மதி இதுவாகும்.
Loading...