இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றைய தினம் நாடாளுமன்ற சபாநாயகரைச் சந்திக்கின்றது.
தெரிவுக்குழுவை ரத்துச் செய்யவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரங்களில் கூறியதையடுத்து பல அதிகாரிகள் தெரிவிக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்க மறுத்துவருகின்றனர்.
இதனையடுத்து தெரிவுக்குழுவின் விசாரணைகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே தெரிவுக்குழு குறித்த இறுதித் தீர்மானத்தினை எடுப்பதற்காக சபாநாயகர் கரு ஜெயசூரியவை தெரிவுக்குழு சந்திக்கின்றது.
இதேவேளை தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சில உறுதிமொழிக்கு அமைவாக இன்றைய தினம் அமைச்சரவை மீண்டும் கூடவுள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய தினமும் பிற்பகல் 4 மணிக்கு தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.