உங்க உடம்பில் இந்த இடத்தில் மச்சம் இருக்கா அப்ப நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்கள் இந்து மத நம்பிக்கைகளின் படி ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்களின் கைரேகைகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. நமது எதிர்காலம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நமது கையிலேயே பதில் இருக்கிறது என்பது நம் மக்களிடையே இருக்கும் ஆழமான நம்பிக்கையாகும்.
நமது கையில் ரேகைகள் மட்டுமின்றி சிலசமயம் மச்சங்களும் இருக்கக்கூடும். இந்த ஒவ்வொரு மச்சத்திற்கும் அவை இருக்கும் இடத்திற்கும் என பல அர்த்தங்கள் உள்ளது. நமது எதிர்காலத்தில் நடக்கப்போவதை பற்றி இந்த மச்சங்களும் நமக்கு உணர்த்தும். இந்த பதிவில் உங்கள் கையில் இருக்கும் மச்சங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம், அவை இருக்கும் இடம் போன்றவற்றை பொறுத்து கையில் இருக்கும் மச்சம் அடர்த்தியாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி இந்த மச்சம் பிறக்கும் போதே தோன்ற வேண்டும் என்ற அவசியமில்லை. சிறிது காலத்திற்கு பிறகு கூட தோன்றலாம்.
ஜோதிட சாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் கைரேகைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஆரம்ப காலத்தில் சிறியதாக இருக்கும் ஆயுள் ரேகை நாள் சிறிது காலத்திற்கு பிறகு நீளமாக மாற வாய்ப்புள்ளது அதேபோல இதற்கு எதிர்மறையாக நடக்கவும் வாய்ப்புள்ளது.
மச்சத்தின் நிலைகள்
மச்சத்தை பொறுத்தவரை உடலின் பல்வேறு பாகங்களில் இருக்கும் மச்சங்கள் ஒருவரின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை உணர்த்துவதாக இருக்கும். இது ஒருவரின் ஆயுள், செல்வநிலை,விதி போன்றவற்றையும் உணர்த்தும். அந்தவகையில் உள்ளங்கையில் இருக்கும் மச்சங்களும் உங்கள் எதிர்காலத்தை என்ன கூறுகிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சுக்கிர மேடு
இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் நல்ல முறையில் வாழ்ந்தாலும் விரைவிலேயே அவர்கள் நன்னெறி மற்றும் தர்ம பாதையில் இருந்து விலகி வாழத் தொடங்கிவிடுவார்கள்.
சந்திர மேடு
இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவர்கள் ஆறு, ஏரி, குளம், கடல் போன்ற நீர் அதிகம் இருக்கும் இடங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு திருமணம் தாமதமாக நடக்கவும் வாய்ப்புள்ளது.
குரு மேடு
இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு திருமண வாழ்க்கை சோதனைகள் நிறைந்ததாக இருக்கும். மேலும் இவர்களின் வாழக்கையில் பல தடைகள் ஏற்படும். வாழ்க்கையில் நினைத்தது கிடைக்க மற்றவர்களை காட்டிலும் பல மடங்கு முயற்சியை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
சனி மேடு
இந்த இடத்தில் மச்சம் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு தாமதமாகவே திருமணம் நடக்கும் திருமணம் நடந்தாலும் இவர்களின் திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. தங்கள் துணையுடன் சேர்ந்து வாழ்வது இவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.
சூரிய மேடு
இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல இறக்கங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களை சுற்றியிருப்பவர்கள் செய்யும் காரியங்களுக்கு இவர்கள் பழி சுமக்க வேண்டியிருக்கும். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களை தொடர்ந்து துன்புறுத்தி கொண்டே இருப்பார்கள்.
புதன் மேடு
சுண்டு விரலுக்கு கீழே மச்சம் இருந்தால் அது புதன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்வில் திடீர் இழப்புகளை அடிக்கடி சந்திப்பார்கள். அது பண நஷ்டமாகவும் இருக்கலாம், உறவு நஷ்டமாகவும் இருக்கலாம்.
ஆயுள் ரேகை
ஆயுள் ரேகையில் மச்சம் இருப்பது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். உங்களின் ஆயுள்ரேகை எவ்வளவு நீளமானதாக இருந்தாலும் அங்கு மச்சம் இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை மோசமாவதுடன், வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
திருமண ரேகை
உங்கள் திருமண ரேகையில் மச்சம் இருப்பது உங்கள் திருமண வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகும். இந்த இடத்தில மச்சம் இருப்பவர்கள் தங்கள் துணையை நிரந்தரமாக பிரிய வாய்ப்புள்ளது.