ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றிபெற அவர்களுக்கு அடிப்படை தேவை சுயஒழுக்கமாகும். சுயஒழுக்கம் ஒருவரிடம் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணங்களில் ஒன்றாகும்.
சுயஒழுக்கம் இருப்பவர்கள் தன் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
இன்று நமது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான தவறுகளுக்கு சுயஒழுக்கம் இல்லாததே காரணமாகும். சில ராசிக்காரர்களுக்கு பிறவியிலேயே சுயஒழுக்கம் அவர்களுடன் பிறந்ததாக இருக்கும்.
இவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் தவறான பாதைக்கு செல்லமாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுயஒழுக்கத்துடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
மகரம்
நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் உங்களால் மகர ராசிக்காரர்களை போல உழைக்கவோ அல்லது சுயஒழுக்கத்துடன் இருக்கவோ முடியாது.
மகர ராசிக்காரர்கள் சிறப்பாக திட்டமிடுபவர்கள் மேலும் இலக்கை நிர்ணயிப்பவர்கள். தங்கள் இலட்சியத்தை தாங்கள் எப்படி அடையப்போகிறோம் என்பது இவர்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஆரோக்கியமாக சாப்பிட, சீக்கிரமாக எழ, உடற்பயிற்சி செய்ய என தங்களை தாங்களே தயார்படுத்தி கொள்வார்கள்.
இதனாலேயே அவர்களின் குறிக்கோள்களை அடைகிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகளாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும் இருப்பார்கள். எனவே அவர்களிடம் சுயஒழுக்கம் இல்லையென்றால் இவர்களின் வாழ்க்கை பல்வேறு விதமான சிந்தனைகளில் மூழ்கிவிடுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் மன உறுதிக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம் அதனை சமாளிக்க திட்டங்களை தயாராக வைத்திருப்பார்கள். எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க இவர்களுக்கு எப்பொழுதும் இவர்களின் சுயஒழுக்கம் துணையாக இருக்கும்.
ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்ய நேர்ந்தால் அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும்.
கன்னி
சுய விழிப்புணர்வு அதிகம் இருக்கும் கன்னி ராசிக்காரர்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான நேர்மறை குணம் என்னவென்றால் இவர்களுக்கு தங்களின் பலம் மற்றும் பலவீனம் நன்கு தெரியும்.
தங்களை சோதிக்கும் செயல்கள் என்ன அதிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். தவறான செயல்கள் இவர்களை தேடி வந்தாலும் அதிலிருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும்.
கடகம்
கடக்க ராசிக்காரர்கள் மிகவும் சுயஒழுக்கத்துடன் இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் முக்கியமான நல்ல குணம் நடந்தவற்றை மறந்து வாழ்க்கையில் முன்னேறுவதாகும். தாங்கள் தவறானவர்கள் அல்ல என்றும் தவறுகள் செய்ய வாய்ப்பில்லை என்பதும் இவர்களுக்கு இருக்கும் ஒரு நம்பிக்கையாகும்.
ஒருநாள் ஒரு தவறை செய்து விட்டால் அதனை மீண்டும் தொடரக்கூடாது என்பது இவர்களுக்கு இருக்கும் கொள்கை, அதில் எப்பொழுதும் உறுதியாகவும் இருப்பார்கள்.