பிரித்தானியாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நீண்ட வரிலையில் காத்திருந்த புகைப்படம் வௌியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிவர்பூலில் உள்ள Aintree மருத்துவமனையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. Emma Satchell என்ற பெண்ணே குறித்த புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார்.
Emma Satchell வௌயிட்டுள்ள புகைப்படத்தில், மருத்துவ நடைபாதையில் நோயாளிகளுடன் மருத்துவ உதவியாளர்கள் நீண்ட வரிசையில் சிகிச்சையளிக்க காத்திருக்கின்றனர்.
Emma Satchell கூறியதாவது, தனது 92 வயதான தாத்தா உடலநலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
உடனே ஆம்புலன்ஸ் மூலம் Aintree மருத்துவமனையை 10 மணிக்கு அடைந்தோம். அங்கு தாத்தாவை அழைத்து சென்ற மருத்துவ உதவியாளர் சிகிச்சையளிக்க நடைபாதையில் தாத்தாவுடன் நீண்ட வரிசையில் நின்றார்.
இதைக்கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன. மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறையினால் 1 மணிக்கே தாத்தாவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் நிதி குறைப்புக்களினால் நாட்டில் தேசிய சுகாதார சேவை சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே புகைப்படத்தை பகிர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.