மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் தற்போது குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், மணமகன்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் கிறிஸ்தவ குடும்பங்களைக் குறிவைக்கும் அவர்கள் பெரும் தொகையை கொடுத்து ஏஜெண்ட்கள் மூலம் பெண்களை திருமணம் செய்கின்றனர்.
இப்படி பல பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்கள் சீன ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
திருமணம் முடிக்கும் பெண்களிடம் சீனாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று பொய் கூறுவதால், அவர்களின் பேச்சைக் கேட்டு பெண்களின் பெற்றோர்களும் சம்மதிக்கிறார்கள்.
திருமணம் முடிந்து அங்கிருக்கும் வரை எந்த ஒரு பிரச்சினையும் இருப்பதில்லை, அங்கிருந்தி சீனாவிற்கு வந்த பின்பு தான் சோகம் தொடர்கிறது.
பாகிஸ்தானிய பெண்களுக்கு மொழி தெரிவது கிடையாது. அவர்கள் அங்கு அடிமைகளை போன்று நடத்தப்படுகிறார்கள்.
பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை என்ற கொடுமையும் நிகழ்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண் நதாசா, சீனாவில் இருந்து போராடி மீட்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய கணவர் என்னை பாகிஸ்தானில் இருந்து விலைக்கு வாங்கியதாக கூறினார்.
என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்றார். அங்கு பாலியல் பலாத்காரம் நடந்தது.
இதேபோன்று மீட்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், விசாரிக்கும் அதிகாரிகளிடம் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே குற்றச்சாட்டுகளை சீன தூதரகம் மறுக்கிறது. ஆனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண ஆர்வலர்கள் இதுபோன்ற கொடூரங்கள் அங்கு அரங்கேறியுள்ளது. இதற்கு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.