Loading...
திஸ்ஸமகாரமவில் மலித் வீரசிங்க எனும் 11 மாத குழந்தை ஒன்று உண்ண உணவில்லாமல் பலியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மரணித்துள்ளதாக, மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு அரசாங்கத்தின் எந்தவொரு உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லையெனவும், தமக்கு நான்கு குழந்தைகள் என்றும், கணவர் மட்டுமே தொழில் புரிவதால், குடும்பத்தை கொண்டுசெல்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியிருந்ததாகவும் குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.
Loading...
மேலும், உயிரோடு உள்ள மூன்று பிள்ளைகளில் இருவர் பாடசாலைக்கு செல்வதாகவும், ஒருவர் முன்பள்ளிக்கு செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது
Loading...