Loading...
மட்டக்களப்பு – பொலனறுவை வீதியின் வெலிக்கந்தைப் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வான் ஒன்றும் டிரக்டர் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிரக்டரில் பயணித்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், உயிரிழந்த ஐவரில் நால்வர் பெண்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்த 12 பேரும் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் வானின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதிவேகமும், வானின் சாரதியின் கவனயீனமுமே விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Loading...