உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், பேர்மிங்ஹாமில் நடைபெற்ற தென்னாரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வெற்றி இலக்கு 242 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி 43.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்களைப் பெற்றது.
பேர்மிங்ஹாம் எட்ஜ்பட்ஸன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி சுமார் ஒரு மணித்தியாலம் தாமதமானது.
மைதானத்தில் ஈரலிப்புத் தன்மை காணப்பட்டதால் ஆட்டத்தை உரிய நேரத்துக்கு ஆரம்பிக்க முடியவில்லை.
இதனால் போட்டியில் ஓவர்களின் எண்ணிக்கை 49 ஆக மட்டுப்படுப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 9 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
ஹாசிம் அம்லா 55 ஓட்டங்களையும் வேன் ட டசன் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லொகி பேர்கசன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சார்பாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை குவித்தார்.
இந்த வெற்றியின் பிரகாரம், புள்ளிகள் பட்டியலில் நியூஸிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது.
8 புள்ளிகளுடன் முறையே இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் 2 ஆம், 3 ஆம் இடங்களிலுள்ளன.
இந்தியா அணி 7 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலுள்ளது.