மத்திய மாகாணம் கண்டி நாவலப்பிட்டி நகரத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த நகரத்தின் பெருமளவு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது மலையக செய்தியாளர் கூறுகின்றார்.
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கடும் மழையினால் நாவலப்பிட்டி பஸ்தரிப்பிடத்திலிருந்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையம் வரையில் கண்டி-ஹட்டன் பிரதான வீதி நீரில் மூழ்கியதால் அவ் வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதன்போது பலரது வாகனங்கள் வெள்ள நீரில் அகப்பட்டதனால் செயலிழந்துபோது அவற்றை உருட்டியும் தள்ளியும் சென்றமையினைக் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை தென்மேற்கு பருவப் பெயர்ச்சியின் காரணமாக தென்னிலங்கை மற்றும் மத்திய இலங்கையில் பலத்த மழை அவ்வப்போது பெய்துவருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.