இலங்கை மற்றும் இந்தியாவுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தமது தளங்களை இழந்துள்ளமையினால் இலங்கை மற்றும் இந்தியாவை அவர்கள் இலக்கு வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கோவையில் உள்ள மூன்று இளைஞர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளாக மாறி இருக்கிறார்கள் என்றும் அவர்களால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
குறித்த மூன்று பயங்கரவாதிகளும் “அபு அல் கிடல்” எனும் பயங்கரவாத அமைப்பை நடத்தி வந்ததாகவும், வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்த அவர்கள் ஒத்திகை பார்த்து இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளத.
இலங்கை இடம்பெற்ற தாக்குதலுக்கு தலைவனாக செயல்பட்ட க்ஷஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியாவில் அண்மையில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.