இலங்கையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் மருதானை ரயில் நிலையத்தில் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இலங்கை நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்தனர்.
இருப்பினும் தற்போது முதல் அஞ்சல் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளமையினால் கோட்டை ரயில் நிலையம் மற்றும் மருதானை ரயில் நிலையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரயில் வேலை நிறுத்தம் முடியும் வரை ரத்து செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.