செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் [நீக்கல்] சட்ட மூல இரண்டாம் மதிப்பீடு 22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 91வாக்குகளும் எதிராக 69 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச் சட்டமூலத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வாக்களித்தது. அத்துடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் பங்கேற்க வில்லை.
பாராளுமன்றத்தில் இன்று செயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் [நீக்கல்] சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
இறுதியில் சட்டமூலத்தை அனுமதிக்குமாறு சபாநாயகர் கோரியபோது, எதிர்க்கட்சிகளின் பிரதானகொரடாவான மஹிந்த அமரவீர வாக்கெடுப்பைக் கோரியாதையடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் சட்டமூலம் 22 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.