இஸ்லாம் மதத்தை விட்டு விலகிய நபர்களை கொலை செய்ய வேண்டும் என அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தெரிவு குழுவில் சாட்சி வழங்கிய ரிஸ்வின் இஸ்மாயித் என்பவரால் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறான விடயம் பாடசாலை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் உருவாகுவதற்கு சிரியா அல்லது வேறு நாட்டின் ஆதரவு அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டில் தான் இஸ்லாம் மதத்தில் இருந்து விலகியதாகவும், அதன் காரணமாக மரண அச்சுறுத்தல் உட்பட விடுக்கப்பட்டதாக ரிஸ்வின் இஸ்மாயித் நாடாளுமன்ற தெரிவு குழுவில் மேலும் தெரிவித்துள்ளார்.