அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. கடந்தாண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலாபால் உடலில் ஆடையில்லாமல், டாய்லெட் பேப்பரை சுற்றிக் கொண்டு காயங்களுடன் இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இப்படத்தின் டீசர் வெளியானது. ஒரு தாய் தன் மகளை தேடுவது போன்ற காட்சிகளுடன் ஆரம்பமான அந்த டீசரின் இறுதியில், பிறந்தமேனியாக அமலாபால் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தில் அமலாபால், ஆடையில்லாமல் வரும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும் என தெரிகிறது. இதற்காக கிட்டத்தட்ட 20 நாட்கள் அமலாபால் ஆடையில்லாமல் நடித்து கொடுத்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.