Loading...
வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் நடந்துள்ளது.
அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் வீடொன்றில் தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர் இந்தக் கடத்தல் முயற்சியை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்ததும் அந்த நபர்கள் நால்வரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
எனினும் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...