கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடத்தப்பட்டுவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக அப்பிரதேச முஸ்லிம் மக்கள் பேரணியொன்று நடத்த முன்னெடுத்துள்ள ஏற்பாட்டினால் கல்முனையில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் இராணுவம், பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் தொழுகையின் பின்னர் குறித்த பேரணியை நடத்துவதற்கு முஸ்லிம் மக்கள் தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களினூடாக மக்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் மேலும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் காணப்படுகின்றமையினால் கல்முனை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான அனைத்து ஏற்படுகளையும் கல்முனை மாநகர மேயர் மற்றும் ஹரீஸ் எம்.பி ஏற்பாடு செய்திருந்தனர்.
- JVP News