கல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் புகுந்த குழப்பக்காரரை அடித்து கலைத்த மக்கள்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சர்வ மதத் தலைவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு சென்ற கல்முனை பிரதி மேயர் காத்த முத்து கணேஷ் அடித்து கலைக்கப்பட்டார்.
குறித்த போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அங்கு சென்று போராட்டத்தினை குழப்ப முற்பட்ட நிலையில் அவர் அங்கிருந்த மக்களால் இவ்வாறு அடித்து கலைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் குறித்த போராட்ட இடத்திற்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கத.