Loading...
முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது கட்சியில் இணைந்துக்கொள்ள முடியுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
Loading...
புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கும் செயற்பாட்டை தங்களது கட்சி முன்னெடுத்துள்ளது. ஆகையால் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகளும் இதில் இணைந்துக்கொள்ள முடியுமென மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக தமது கட்சியை வலிமைப்படுத்தும் செயற்பாட்டை மஹிந்த தற்போது முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையிலேயே முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...